[X] Close

ராகுலை பிரதமர் வேட்பாளக அறிவித்ததில் தவறு இல்லை: இரா.முத்தரசன் கருத்து


mutharasan-about-pm-candidate-announcement

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 12:43 pm
  • அ+ அ-

ராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தது தவறல்ல. நாங்களும் விரைவில் ஆதரவை அறிவிப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற விவசாய சங்க மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பட்டாசு ஆலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

கஜா புயல் நிவாரண அறிவிப்பு மிகவும் மோசமானது. ஆமை வேகத்தில் நிவாரண பணி நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை போராடுமாறு கட்சிகள் தூண்டவில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மாநில அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தது தவறல்ல. நாங்களும் விரைவில் ஆதரவை அறிவிப்போம் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close