[X] Close

திமுக-காங்கிரஸ் கூட்டணி சரிவை சந்திக்கும்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


pon-radhakrishnan-about-dmk-congress-alliance

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 12:34 pm
  • அ+ அ-

திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, வாஜ்பாய் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட் டுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். கூடா நட்பு கேடில் முடியும் என்று கருணாநிதி கூறுவார். அதை இப்போது ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

திமுகவினர் அதன் விளைவுகளைச் சந்திப்பார்கள். வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய சரிவை சந்திக்க உள்ளது. மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடத்திய கூட்டத்தை, திமுக- காங்கிரஸார் பெங்களூருவில் நடத்தியிருக்க வேண்டும். விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக, அந்த துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close