[X] Close

கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


thirumavalavan-accuses-pm-modi

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும் தொல்.திருமாவளவன்.

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 13:26 pm
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வருத்தம் கூட தெரி விக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனின் முத்து விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வேலூர் வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, " குட்கா வழக்கில் நீதிமன்றம் சில ஆலோசனைகளை கூறியுள்ளன. அதன்படி, குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரி வருகிறது. ஆனால், இங்கு இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படுகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்.

இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்ய பாஜக உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ கத்துக்கு வரும்போது, அவரை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அது ஜனநாயகமும் அல்ல. பிரதமர் மோடி மீது பொதுமக்கள் கோபத்தில் இருப்பதால் அவர்களே எதிர்ப்பார்கள்.

கணினிகளை கண்காணிக்க உளவுத் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது எதிரிகளை பழிவாங்க வழிவகுக்கும். இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. இது ஒரு வகையான சுயநலம் மனப் பான்மை" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close