[X] Close

ஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து


stalin-s-remarks-causes-confusion

திருமங்கலத்தில் நடந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்றார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 13:16 pm
  • அ+ அ-

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அமைச் சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதை யொட்டி, ஜெயலலிதா பேரவை சார்பில், திருமங்கலம் தொகுதியில் அனைத்து இடங்களிலும் வீடு வீடாகச் சென்று இளைஞர்கள் சாதனை விளக்கப் பிரச்சாரம் நடந்தது. இதையொட்டி திருமங்கலம் நகர், உசிலம்பட்டி சாலையில் இருந்து சைக்கிள் பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேரணியைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்த ஆட்சி 2 நாள் கூட நீடிக்காது என்றார்கள். வெற்றிகரமாக தற்போது 2 ஆண்டுகளைக் கடந்து ஆட்சியில் இருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வர முதலில் முயற்சி எடுத்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளனர்.

மத்தியில் 17 ஆண்டாக அங்கம் வகித்த திமுக, முல்லைப் பெரியாறு பிரச்சினையைத் தீர்க்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என மு.க. ஸ்டாலின் அறிவித்ததால் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிலை திறப்புக்கு ஏன் வந்தோம் என சோனியா, ராகுல் புலம்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close