[X] Close

புதூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் இருபிரிவாக மோதல் 


admk-partymen-clash

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 13:11 pm
  • அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் புதூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் இரு பிரிவாக மோதிக்கொண்டனர்.

புதூரில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட அதிமுக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், பி.சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டத்தினரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அப்போது, தொண்டர் ஒருவர் முதலில் ஜி.வி.மார்க்கண்டேயனை பேச அழைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார். மற்றொரு தரப்பினர் சின்னப்பனை முதலில் பேச அழைக்க வேண்டும் என குரல் எழுப்பினர். கூட்டம் தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். நாற்காலிகள் பறந்தன. மேடையை விட்டு கீழே இறங்கி வந்து தொண்டர்களை அமைச்சர் சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் கூட்டம் தொடங்கி, 10 நிமிடங்களில் முடிவடைந்தது.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “வேட்பாளரை அறிவிக்கும் முன்பே ஆளுக்கொரு கற்பனை செய்துகொண்டு மோதலில் ஈடுபட வேண்டாம். கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அவரை வெற்றிபெற வைக்க நாம் உழைப்போம். கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.

கூட்டத்தின்போது, இடைத்தேர் தலுக்கு வெளி ஆட்களே பொறுப்பாளர்களாக உள்ளனர். எனவே, உள்ளூரில் உள்ளவர்களை பொறுப்பாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என, அமைச்சரிடம் மார்க்கண்டேயன் வலியுறுத்தினார். தொடர்ந்து விளாத்திகுளம், குளத்தூர், எட்டயபுரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close