[X] Close

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி


ram-temple-will-be-constructed-before-ls-elections

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Dec, 2018 11:45 am
  • அ+ அ-

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிடும் என பாஜக முக்கிய பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கும்ப மேளா கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் ஆதித்யநாத், "அயோத்தியில் யார் ராமர் கோயில் கட்டுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள். அயோத்தியில் ராமர் கோயிலை பாஜகவால் மட்டுமே கட்ட முடியும்.

வாக்குகளைப் பெறுவதற்காக சிலர் (ராகுல்) பூணூல் அணிந்துகொண்டு பிரச்சாரத்துக்கு வருகிறார்கள். ராமரும், கிருஷ்ணரும் உண்மை இல்லை என்று கூறுபவர்கள்தான் அவர்கள். அவர்களால் ராமர் கோயிலைக் கட்டவே முடியாது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக மட்டும் பின்வாங்கவில்லை என்றால் நாளைகூட அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிடலாம். ஆதித்யநாத் சொன்னதுபோல் பாஜகவால் மட்டுமே இங்கு ராமர் கோயில் கட்ட முடியும். மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும். 

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கலாம். ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்" எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close