[X] Close

காவிரி டெல்டா அழிவது இந்தியாவுக்கே கேடு: ஜி.வி.பிரகாஷ் காட்டம் 


cauvery-management-board-gv

  • kamadenu
  • Posted: 29 Mar, 2018 20:03 pm
  • அ+ அ-

காவிரி டெல்டா அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கேடு என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வு என்று ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல., இந்தியாவிற்கே கேடு. காவிரி டெல்டாவை வறட்சியிலிருந்து காப்பாற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு'' என்று தெரிவித்துள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close