[X] Close

ஹாட்லீக்ஸ் : வந்தது சிலை... வச்சது யாரு?


hot-leaks-silai

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 08:24 am
  • அ+ அ-

சிலை வைக்க எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்க... தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்குப் பக்கத்தில் கடந்த வாரம் திடீரென முளைத்தது ஜெயலலிதா சிலை.

இதை வைப்பதற்காக மூன்று நாட்களாக பீடம் அமைக்கும் பணி நடந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாத மாநகராட்சி, “சிலையை யார் வெச்சாங்கன்னு தெரியலையே..!” எனத் தந்திரமாகக் கைவிரிக்கிறது.

அதிமுக தரப்பிலும் இதற்கு யாரும் நேரடியாக சொந்தம் கொண்டாடவில்லை.

இதனிடையே, “ஏற்கெனவே சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட பழைய சிலை போல் இது இருக்கிறது.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் எம்பிதான் சென்னைப் பக்கம் இருந்து இந்த சிலையை நகர்த்திவந்து தனது ஆதரவாளரான பகுதிச் செயலாளர் சரவணன் மூலமாக சத்தமில்லாமல் இங்கே வெச்சுட்டாரு” என்றும் சிலர் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close