[X] Close

ஹாட்லீக்ஸ் : சபாநாயகரிடம் வருந்திய முதல்வர்


hotleaks-edappadi

  • kamadenu
  • Posted: 23 Dec, 2018 13:37 pm
  • அ+ அ-

மேகேதாட்டு அணை விவகாரத்துக்காக அண்மையில் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டபோது, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய சென்னையைச் சேர்ந்த திமுகவின் அதிரடி எம் எல் ஏ ஒருவர், முதலமைச்சரை ஒருமையில் பேசுமளவுக்குப் போய்விட்டாராம். 

முதல்வர் இதை கேட்டும் கேட்காது போல் இருந்தாலும் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன், சம்பந்தப்பட்ட அந்த எம்எல்ஏ சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தாராம். 

ஆனால், ஆளும் கட்சி எம் எல் ஏ-க்கள் மற்ற யாரும் இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளாததால் ராமச்சந்திரனின் குரல் எடுபடவே இல்லையாம். 

அதேசமயம், கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகரைச் சந்தித்த முதல்வர், “அந்தாளு பேசுனத பாத்தீங்களா... எப்படியெல்லாம் அவை நாகரிகம் இல்லாம நடந்துக்கிறாங்க பாருங்க...” என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close