[X] Close

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி: அமைச்சர் வேலுமணி நம்பிக்கை


admk-mla-velumani-confident-of-victory

விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசினார்.

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:45 am
  • அ+ அ-

விளாத்திகுளத்தில் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் சி.த.செல்லபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வி.மார்க்கண் டேயன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வி.எம்.ராஜலெட்சுமி, கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.முருகையா பாண்டியன், எஸ்.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது, ``கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டக் கூடிய தேர்தல் இது. கூட்டணி பற்றி கவலைப்படாமல் இடைத்தேர்தல் பணிகளை அதிமுக செய்து வருகிறது. புதிதாக கட்சி தொடங்குபவர்களை கூட்டணிக்கு அழைக்க திமுக காத்துக் கொண்டி ருக்கிறது. அதிமுக தனித்து நிற்க தயார், திமுக தயாரா?. 20 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றார் அவர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது, ``இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளில் அதிமுக வெற்றி உறுதி. தொகுதிக்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் துரோகத்துக்கு பாடம் புகட்ட முடியும்” என்றார் அவர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது, மக்களவைத் தேர்தலுடன் வந்தாலும் சரி, தனியாக நடத்தப்பட்டாலும் சரி, இடைத் தேர்தலை சந்திக்க அதிமுக தயார் நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக கடந்த 2 நாட்களாக வாக்குச்சாவடி முகவர் நியமிக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

விளாத்திகுளம் ஒன்றிய முன்னாள் செயலாளர் எஸ்.முனிய சாமி தனது மகன் மதிப்பிரகாசம் மருத்துவ செலவுக்கு நிதி வேண்டும் என அமைச்சர் வேலுமணியிடம் மனு வழங்கினார். உடனடியாக, அவருக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close