[X] Close

ஹாட்லீக்ஸ் : ஃப்ளெக்ஸ் வைத்துப் பாராட்டும் எஸ்பி!


hot-leaks-police

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:28 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்ட எஸ்பி-யாக ஜெயக்குமார் பதவியேற்று 18 மாதங்கள் ஆகின்றன. 

இதுவரை, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும், மணல் கடத்தல், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணை போனதாகவும் சுமார் 500 காவலர்களை இடமாற்றம் செய்தும், பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 

தவறுசெய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது போல் சிறந்த சேவை செய்யும் காவலர்களைப் பாராட்டி ரொக்கப் பரிசளித்து கவுரவித்தும் வருகிறார் எஸ்பி. 

அத்துடன், இப்படி சேவையாற்றும் காவலர் துறையினரின் பெயர்களையும் அவர்கள் செய்த சாதனையையும் பட்டியலிட்டு, வாரா வாரம் எஸ்பி அலுவலகத்தின் நுழைவு வாயிலில், ‘இந்த வாரம் மெச்சத்தகு நற்பணியாற்றியவர்கள்’ என்று தலைப்பிட்டு ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தும் ஊக்கப்படுத்தி வருகிறார் ஜெயக்குமார்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close