[X] Close

முதல்வர் வாழப்பாடி.. அமைச்சர் பொன்னர்சங்கர்: ஸ்டாலினுக்கு என்னதான் ஆச்சு?!


stalin

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Mar, 2018 16:18 pm
  • அ+ அ-

திமுக என்றவுடன் முதலில் நம் மூளையில் பொறிதட்டுவது அனல் பறக்கும் பேச்சு.. அடுக்குமொழித் தொடர்கள், உவமை உவமேயங்கள், நையாண்டிக்கும் குறைவில்லாத பேச்சாற்றல்.

திமுக பேச்சாளர்கள் பேச்சுக்கே அவ்வளவு மவுசு என்றால் தலைவர் கருணாநிதியின் பேச்சு மக்களைக் கட்டிப்போட்டும் வைக்கும் திறன் கொண்டது.

மயிலை மாங்கொல்லையில் அவர் மைக் பிடித்துப் பேசினால்... மணிக் கணக்கில் காத்திருந்து கேட்கும் ஒரு கூட்டம்.

அப்பேற்பட்ட பேச்சாற்றலின் பெட்டகமான திமுகவில் செயல்தலைவர் சமீபகாலமாக பேசும்விதம் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக உலாவரத் தொடங்கிவிட்டன என்பது வேதனைக்குரியதுதான்.

சரி யானைக்கு சறுக்கும் அடி... சாரி.. சாரி.. யானைக்கும் அடி சறுக்கும் என்று எடுத்துக்கொண்டு அந்த 'பூனை மேல் மதில்ல..' கண்டு கொள்ளாமல்விட்டால், அடுத்தடுத்து இப்படியா பேசுவார்?!
இதோ சில சேம்பிள்கள்..

"விமான நிலையத்தில் பேட்டி கொடுப்பதற்காகவே மத்தியில ஒரு அமைச்சர போட்டு வச்சிருக்காங்க. அதில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர்.. (என்னாது பொன்னர் சங்கரா? அது உங்க அப்பா எழுதின கதையாச்சே!) பொன்ராதாகிருஷ்ணன் தான் இந்த அபாரமான கருத்தை சொல்லியிருக்கார்" 

"யானை வரும்முன்னே மணியோசை வரும் பின்னே என்பதைப் போலவே (முன்னப் பின்ன தப்பா பேசினா எப்படி?) இந்தப் புத்தகம் வருவதற்கு முன்னரே நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது.."

"தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் வாழப்பாடி தலைமையிலான.. (பக்கத்துல துரைமுருகன் சிரிக்கிறாரு பாருங்க) எடப்பாடி தலைமையிலான இந்த பினாமி ஆட்சி"

அன்னிக்கு தவறவிட்டவர்களுக்காக இதோ இந்த பீஸ்... "கட்சித் தொடங்குவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன? நாங்கள் இங்குமில்ல அங்குமில்ல நடுவுல நிக்கிறோம்.. பூனை மேல் மதில் மேல" (என்னது பூனை மேல் மதிலா? பூனை நசுங்கி செத்துருமே!)

இதையெல்லாம் சேர்த்து கோர்த்த நெட்டிசன்கள் கடைசியில் காவலன் படத்தில் வடிவேலு சொல்லும் டயலாக், கண்ணதாசா? ஏசுதாசா? ஐயோ பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாருன்னு கோர்த்துவிட்டிருக்காங்க.

ஸ்டாலினுக்கு என்னதான் ஆச்சு?!
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close