[X] Close

ஹரியாணா மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி; 5 மாநகராட்சிகளையும் கைபற்றியது


haryana-civic-polls-bjp

  • நெல்லை ஜெனா
  • Posted: 19 Dec, 2018 15:53 pm
  • அ+ அ-

சண்டிகர்

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜக 5 இடங்களில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தில் முன்னிலை பெற்று வருகிறது

ஹரியாணா மாநிலத்தில் ஹிசார், ரோதக், யமுனாநகர், பானிபட், கர்னால் ஆகிய 5 மாநகராட்சிகளுக்கும், 2 மாநகராட்சி கமிட்டிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

மாநகராட்சி மேயர்கள் இதுவரை வார்டு கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இந்தமுறை மக்களே தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் தொடக்கம் முதலே 5 மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. யமுனா நகர் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் மதன்சிங் சவுகான் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பானிபட் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் அவ்நீத் கவுர் 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  

ஹிசார் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் கவுதம் சர்தானா 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுபோலவே, கர்னால் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் ரேணுபாலா குப்தா காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்ட இந்திய தேசிய லோக்தளக் கட்சி வேட்பாளரை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்டிகடித்தார்.

ரோதக் மாநகராட்சியிலும் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். எனினும் அங்கு காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close