[X] Close

ஹாட்லீக்ஸ் : மக்களவைத் தேர்தலில் மன்மோகன்சிங்?


hot-leaks-police

  • kamadenu
  • Posted: 19 Dec, 2018 09:40 am
  • அ+ அ-

1991-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். 

இவர், இதுவரை ஒரே ஒருமுறை (1999) மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் . 

அந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த மன்மோகன், அதன்பிறகு, அசாம் மாநிலத்திலிருந்து தொடர்ந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 

இப்போதுள்ள பதவிக்காலம் அடுத்த வருடம் நிறைவடையும் நிலையில், மீண்டும் அவர் மக்களவைக்குச் செல்லவேண்டுமானால் அதற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும். 

இதைத் தவிர்ப்பதற்காக மன்மோகனை மக்களவைத் தேர்தலில் களமிறக்க நினைக்கிறது காங்கிரஸ். பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் தொகுதியில் அவரை நிறுத்துவது காங்கிரஸின் திட்டம். 

ஆனால், 86 வயதைக் கடக்கும் அவர் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க சம்மதிப்பாரா என்பது அரசியல் நகர்வுகளைப் பொறுத்துத்தான் தெரியும். இதனிடையே, மன்மோகனைத் தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் தரப்பில் திமுகவுடன் பேசுவதாகவும் ஒரு தகவல்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close