[X] Close

என் பலம் என்ன தெரியுமா?- ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ.


don-t-you-realise-my-power-bjp-lawmaker-threatens-officer-on-camera

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Dec, 2018 13:33 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை தொண்டர்கள் சூழ வசைபாடிய பாஜக எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் சிக்ரி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., உதய்பென் சவுத்ரி. இவர் தனது சகாக்களுடன் சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட் கரிமா சிங்கை சந்திக்க வந்தார்.

அப்போது அவர் அந்த அதிகாரியிடம், "நான் எம்.எல்.ஏ., என்பது உங்களுக்குத் தெரியாதா? எனது பலம் என்னவென்பது தெரியுமா இல்லையா? ஜனநாயகத்தின் சக்தி என்னவென்று தெரியுமா?" எனக் குரலை உயர்த்திப் பேசுகிறார்.

விவசாயிகள் வங்கிக் கடன் குறித்து பேசவந்தபோது அதிகாரிகள் அதற்கு செவி கொடுக்கவில்லை என்பதே சவுத்ரியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே அவர் கரிமாவிடம் இவ்வாறு பேசுகிறார். ஆனால், அந்த அதிகாரியோ எவ்வித சலனமும் இல்லாமல் சற்றும் ஆவேசப்படாமல் அமைதியாக நிற்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

 

 

அதற்கு, நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

"எம்.எல்.ஏ., சவுத்ரி அவர்களே... மக்களின் பலன் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியும்.. அப்போதுதான் உங்களுக்கு ஜனநாயகத்தின் பலன் புரியும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு!
இதற்கிடையில் கரிமா சிங்குக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவளித்திருக்கிறது. இது தொடர்பாக சங்கத்தின் ட்விட்டர் பக்கத்தில், "இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் களப்பணியின்போது இப்படி மிரட்டப்படுவது ஏற்புடையது அல்ல. இப்படியான சூழலில்தான் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்றனர். கரிமா சிங்கை நினைத்து பெருமை கொள்கிறோம். நெருக்கடிக்கு அவர் சற்றும் அடிபணியவில்லை" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close