[X] Close

ஹாட்லீக்ஸ் : மல்லுக்கு நிற்கும் அமைச்சர்


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 18 Dec, 2018 10:40 am
  • அ+ அ-

ராமநாதபுரத்தின் முரட்டுக்காளை என்று திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் மணிகண்டன். 

கடந்தவாரம், ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜாவின் பேத்திக்கு திருமணம். அதற்காக அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரை வரவேற்று ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து அமர்க்களப்படுத்திய ஆளும்கட்சியினர் அண்ணன் மணிகண்டனை அவ்வளவாய் கண்டு கொள்ளவில்லை. 

இதனால் கடுப்பான மணிகண்டன், வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாராம். இது போதாதா... இரவோடு இரவாக அந்த ஃப்ளெக்‌ஸ் போர்டுகளை கிழித்து எடுத்து துவம்சம் செய்துவிட்டது மணியார் கோஷ்டி. 

இந்த விவகாரத்தில் கட்சியின் தென்மண்டல தளபதி போல் வலம் வரும் அமைச்சர் உதயகுமாரையும், “ராமநாதபுரத்தின் அடுத்த எம்பி நான்தான்” என்று பிரகடனப்படுத்தி வரும் ராஜகண்ணப்பனையும் ஏகத்துக்கு உஷ்ணமாக்கி உட்கார வைத்திருக்கிறதாம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close