[X] Close

ஸ்டாலின் சிறந்த தலைவர்; ஈபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் விரோதிகள்!- செந்தில் பாலாஜி


senthil-balaji-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Dec, 2018 14:33 pm
  • அ+ அ-

தொண்டர்களின் அரவணைப்பைப் பெற்றிருக்கும் ஸ்டாலின்தான் சிறந்த தலைவர் தமிழக உரிமைகளை சூறையாடி ஆட்சி செய்யும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் விரோதிகள் என திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியாகவும் இருந்த செந்தில் பாலாஜி இன்று (டிச.14) பகல் 12 மணியளவில் சென்னை அறிவாலயம் வந்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஸ்டாலினை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பின் ஓர் இயக்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன்.

தற்போது தளபதி மீது உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளேன். ஸ்டாலின், தொண்டர்களின் அரவணைப்பைப் பெற்றிருகிறார். எனவே, கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு எண்ணங்களுக்கு விருப்பங்களுக்கு ஏற்ப திமுகவில் இணைந்துள்ளேன்.

தமிழகத்தை ஆளும் ஈபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் விரோதிகள். தமிழகத்தின் உரிமைகளை அவர்கள் சூறையாடி மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார்கள். தமிழக உரிமைகளை பாஜகவிடம் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் ஸ்டாலின். அவர் அடித்தளத்தை வலுப்படுத்த திமுகவில் இணைந்துள்ளேன்.
இருள் அகற்றி ஒளி தருவது சூரியன். இன்று எனது மனதில் உள்ள இருளை அகற்றி இருக்கிறார்கள். எப்போது, நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் வந்தாலும் மக்கள் திமுகவுக்கு மகத்தான வெற்றி தர வேண்டும். மக்கள் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார்கள். 
நான் இதுவரை எந்த இயக்கத்தில் இருந்தாலும்  அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.

1996-ல் முதன் முறையாக கவுன்சிலர் பதவிக்காக சுயேட்சையாகப் போட்டியிட்டேன். பின்னர் அதிமுகவில் இணைந்தேன். அம்மாவுடைய மறைவு வரை அதிமுகவில் இருந்தேன். அதன் பின்னர் ஓர் இயக்கத்தில் இருந்தேன். இப்போது தளபதி ஈர்ப்பால் திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும். கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றிக்காக எனது
உழைப்பு இருக்கும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close