[X] Close

நிச்சயமாக இது வெற்றிகரமான தோல்விதான்: அடித்துச் சொல்கிறார் தமிழிசை


tamilisai-reiterates-her-statement-on-poll-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Dec, 2018 11:41 am
  • அ+ அ-

5 மாநில தேர்தலில் பாஜக பெற்றது நிச்சயமாக வெற்றிகரமான தோல்விதான் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

5 மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 'இது வெற்றிகரமான தோல்வி' என்று கருத்து சொல்ல அதைவைத்து வழக்கம்போல் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்யத் துவங்கினர்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "நான் சொன்ன வெற்றிகரமான தோல்வி விவாதப்பொருள் ஆகியிருக்கிறது.

நான் என்ன சொன்னேன் என்றால், மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் வாக்கு சதவீதம் 41%, காங்கிரஸ் வாங்கியது 40%. வெறும் ஒரு சதவீதம் மட்டுமே விதியாசம். அதேபோல், ராஜஸ்தான் வாக்கு எண்ணிக்கை சதவீதத்தில் ஒரே ஒரு சதவீதமே காங்கிரஸைவிட நாங்கள் குறைவு. எங்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

ஆக இது நிச்சயமாக வெற்றிகரமான தோல்விதான். இது விரைவில் வெற்றிகரமான வெற்றியாக மாறும்" எனக் கூறிச் சென்றார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னணியும் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் ஆட்சி அமைக்கின்றன.

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பாஜக ஒரு மாநிலத்தைக்கூட கைப்பற்றவில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close