[X] Close

கார்ட்டூனைப் பகிர்ந்து கலாய்த்த கருணாகரன்: தில்லுதான் என பாராட்டிய நெட்டிசன்கள்


actor-karunakaran-on-election-results

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Dec, 2018 11:38 am
  • அ+ அ-

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களை காங்கிரஸும் மீதமுள்ள 2 மாநிலங்களை பிராந்திய கட்சிகளும் தக்கவைத்துக் கொள்ள தேர்தல் முடிவை நடிகர் கருணாகரன் கொண்டாடியிருக்கிறார்.

பசுமாடு ஒன்று பின்னங்காலால் எட்டி உதைக்க பிரதமர் மோடி கீழே விழுந்து கிடப்பதுபோல் உள்ள அந்த கேலிச்சித்திரத்தை பகிர்ந்த கருணாகரன் அதற்கு மேல் ஒரு கேப்ஷன் மட்டும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் HolyCow எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்த ட்வீட்டை அவரைப் பின் தொடர்பவர்கள் பலரும் ரசித்து ரீட்வீட் செய்ததுடன் சிலர் துணிச்சலான பதிவு, ரொம்ப தில்லுதான் என்றெல்லாம் பாராட்டியுள்ளனர்.

ட்விட்டராட்டி ஒருவர், அண்ணன் வீட்டுக்கு ஒரு ஐடி ரெய்டு பார்சல் என்றும் பதிவு செய்துள்ளார்.

நடிகர் கருணாகரன் திமுக அனுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close