[X] Close

மதிமுக - விடுதலை சிறுத்தைகள் மோதல் விவகாரம்: வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு


vaiko-thirumavalavan-meet

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 10:30 am
  • அ+ அ-

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் அளித்த ஒரு பேட்டியில்   வைகோ தெரிவித்த கருத்து பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு விமர்சித்திருந்தார்.  இதற்குவைகோ தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் திருமாவளவன் நேற்று  சென்னை அண்ணாநகரில் உள்ள  வைகோவின்  வீட்டுக்கு சென்று, அவரைச் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நீர் அடித்து, நீர் விலகாது என்பார்கள். காற்றிலே பிரிவை ஏற்படுத்த முடியாது. அதுபோலத்தான் நானும், திருமாவளவனும். நான்கூட்டணியில் இல்லாத காலத்திலும்கூட, வேலூர் சிறையில் இருந்த என்னை திருமாவளவன் வந்து பார்த்தார். அரசியலில் அவர் நல்ல இடத்துக்கு வர வேண்டும் என்று நினைப்பவன் நான்” என்றார்.

திருமாவளவன் கூறும்போது, “வைகோ மிகவும் வெளிப்படையானவர். மனம் திறந்து பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். சூது, சூழ்ச்சி, கள்ளம், கபடம் என்ற அந்த அணுகுமுறைகளை ஒருபோதும் கையாண்டதில்லை. மனதில்பட்டதை பளிச்சென்று சொல்லக்கூடியவர். வன்னி அரசு சமூக வலைதளங்களில் பதிவு செய்தது வைகோவை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது.

அதிலே நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். கடந்த 30 வருட காலத்தில், அவரது அணுகுமுறையில் ஒருதுளிஅளவும் சாதிப் பாகுபாடு இருந்ததை நான் கண்டதில்லை. எனவே,அவரை சாதி அடிப்படையில் சிந்திக்கிறார் என்று வன்னி அரசு பதிவு செய்தது வருத்தத்துக்குரியது.  உடனே அவரை கண்டித்தேன். பதிவை நீக்கச் சொன்னேன். வைகோவைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவிக்கச் சொன்னேன்”  என்றார் திருமாவளவன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close