[X] Close

மோடி அலை ஓயவே ஓயாது: தமிழிசை


modi-wave-will-never-ever-recede

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Dec, 2018 11:55 am
  • அ+ அ-

இந்தியாவில் மோடி அலை ஓயவே ஓயாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

நடந்து முடிந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகுத்து வரும் நிலையில், "மோடி அலை ஓயவே ஓயாது. நாங்கள் வெற்றியைக் கண்டு துள்ளுவதும் இல்லை.

தோல்வியைக் கண்டும் துவண்டுவிடுவதும் இல்லை. 2019 மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இந்த தேர்தலில் வாக்கு வித்தியாசங்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன. 

இதுவரை வாக்குப்பதிவு இயந்திரங்களை கோளாறு செய்து கொண்டிருந்த காங்கிரஸ், மக்கள் மனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி தவறான கருத்துகளை ஏற்படுத்திய காங்கிரஸ் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close