[X] Close

உ.பி அரசியலில் திருப்பம்: பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைக்கிறார் மாயாவதி


mayawati-hints-at-sp-bsp-alliance-in-2019

  • நெல்லை ஜனா
  • Posted: 26 Mar, 2018 16:27 pm
  • அ+ அ-

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராக இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி் தலைவர் மாயாவதி மறைமுகமாக கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போதே தோல்வி கண்டது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச இடைத் தேர்தலில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கோர்த்து செயல்பட்டதால், பாஜகவை வீழ்த்த முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் இதேபோன்று பாஜகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை எதிர்க்க, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என பிற கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

‘‘உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பாஜகவை ஆட்டிப்படைக்கிறது. இந்த மாநிலத்தில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் பாஜக உறுதியுடன் உள்ளது. வரும் தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. சொந்த பயனுக்காகவோ, ஆதாயத்திற்காக இதனை கூறவில்லை. நாட்டை மிகமோசமாக வழிநடத்தி வரும் மோடி அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமே’’ எனக் கூறினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close