[X] Close

ஹாட்லீக்ஸ் : மீண்டும் சிவசேனாவை நெருங்கும் பாஜக!


hot-leaks-sivasena

  • kamadenu
  • Posted: 10 Dec, 2018 20:30 pm
  • அ+ அ-

பாஜக கூட்டணியில் பிரதான பார்ட்னராக இருக்கும் சிவசேனா, சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை எடுத்துவைத்ததுடன், கூட்டணியிலிருந்து விலகப் போவதாகவும் மிரட்டியும் வந்தது.

மத்திய அமைச்சரவையிலும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையிலும் சிவசேனாவுக்கு பாஜக போதிய முக்கியத்துவம் அளிக்காததே இதற்குக் காரணம்.

இதைப் புரிந்துகொண்ட பாஜக, மகாராஷ்டிராவில் துணை சபாநாயகர் பதவியை சிவசேனாவுக்குத் தந்திருக்கிறது.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இப்போது இணக்கமான சூழல்!

இதை ஊருக்குச் சொல்லும் விதமாக, கடந்த வாரம் மும்பையில் நடந்த ஒரு விழாவுக்கு மரபை மீறி, முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் ஒரே காரில் வந்திறங்கினார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close