[X] Close

திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்க பொருத்தமான தலைவர் ஸ்டாலின்: அன்பழகன் பேச்சு


dmk-anbazhagan-speech

அன்பழகன் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 12:22 pm
  • அ+ அ-

ஆரிய கலாச்சாரம் இன்று மீண்டும் எழுந்துள்ள நிலையில், வருங்காலத்தில் திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஸ்டாலின் பொருத்தமான தலைவராக இருப்பார் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசினார்.

ஈரோடு மண்டல திமுக மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வில் உணவு இடைவேளைக்குப் பின் நடந்த அமர்வில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:

பாசுமாட்டை காப்பதாகக் கூறி, பல உயிர்களை எடுத்து வருகின்றனர். பாஜக ஆட்சி வந்ததும் சமஸ்கிருதத்தை, இந்தியை திணிக்கின்றனர். அழிந்து வரும் அந்த மொழியை ஆயிரம் கோடி செலவு செய்து உயிர்பிக்கின்றனர். நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தமாட்டோம் என நம்ப வைத்து, ஏமாற்றியவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழகத்தில் நம் அரசு செலவில் மருத்துவ கல்லூரி கட்டிக் கொடுத்தால், அதில் ஐந்து தமிழ் மாணவர்கள் கூட படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்டாலின் முதல்வரானதும் நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்தினை போடுவார். ஜனநாயகத்தை நாம் நம்புவதால் ஆட்சி மாற்றத்திற்கு சற்று பொறுத்து இருக்க வேண்டும் , என்றார்.

மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசும்போது, சூழ்நிலை வாய்ப்பு கிடைத்தால் ஒருவர் தலைவர் ஆகி விட முடியும். எந்த தியாகமும் செய்யாமல் சிலர் தலைவராக முடியும் என நினைக்கின்றனர், என்றார்.

மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது:

நான் எம்.ஏ. படித்து முடித்தபோது 1945-ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் பங்கேற்றேன். அந்த மாநாடு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அப்போது கூடிய கூட்டத்தை விட இன்று 100 மடங்கு கூட்டம் ஈரோட்டில் கூடியுள்ளது.

உடல் நலக்குறைவால் கட்டாய ஓய்வில் கருணாநிதி இருக்கும் நிலையில், அவரைப் போலவே, சிந்தித்து செயல்பட்டு, இயக்கத் தோழர்களிடம் அன்பு பாராட்டும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு. ஆரிய கலாச்சாரம் இன்று மீண்டும் எழுந்துள்ள நிலையில், வருங்காலத்தில் திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஸ்டாலின் பொருத்தமான தலைவராக இருப்பார், என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close