[X] Close

ஹாட்லீக்ஸ்: ஏன் தவிர்க்கிறார் வைகோ?


hot-leaks-vaiko

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 09:38 am
  • அ+ அ-

கடந்த சில மாதங்களாகவே, தமிழ் தேசியம் பேசும் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறாராம் வைகோ. 

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தமிழன் எதிரி தமிழன்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நவம்பர் 14-ல் சென்னையில் நடந்தது. 

நூலை பழ.நெடுமாறன் வெளியிட வைகோ பெற்றுக்கொள்வதாக ஏற்பாடு. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் வைகோ கலந்துகொள்ளவில்லை. 

தமிழ் தேசியம் பேசுபவர்கள், திராவிடக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

 அதுபோன்ற மேடையில் தன்னை வைத்துக்கொண்டு யாராவது எதையாவது பேசப் போய் அது திமுக கூட்டணிக்குள் சங்கட அலையைப் பாய்ச்சிவிடுமோ என்ற அச்சத்தில்தான் வைகோ தங்களது நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதாக சங்கடத்துடன் சொல்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close