[X] Close

ஆள்வோரின் அலட்சியத்தால் தமிழகத்துக்கு நிதி 90% குறைப்பு: தினகரன் குற்றச்சாட்டு


ttv-dinakaran-int

தினகரன் | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 14:35 pm
  • அ+ அ-

 

ஆள்வோரின் அலட்சிய போக்கால் தமிழகத்துக்கான 90 சதவீத நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுகுறித்து ஆள்பவர்கள் கேட்காதது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பி யுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியதுதான் பொற்கால ஆட்சி, இப்போது நடப்பது மக்கள் விரோத ஆட்சி என்றுதான் கூற வேண்டும். இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்க்க முடியாது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் உள்ள குளறுபடிகள் குறித்து சீராய்வு மனுவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

தமிழகம் திராவிட ஆட்சியில் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளதால், மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. கர்நாடக அரசுக்கு 35 சதவீதம் நிதியை குறைத்துள்ளது. தமிழகத்துக்கு சுமார் 90 சதவீதம் நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகத்தை ஆள்வோர் இதுகுறித்து எதுவும் கேட்காமல் உள்ளனர்.

எந்த காலத்திலும் மதவாத சக்திகளோடு நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது. இங்கு ராம ராஜ்யம் நடக்காது. ஆனால், ராமச்சந்திர ராஜ்யம் நடந்த இடம் இது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கும் என்றார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close