[X] Close

அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்!- எச்.ராஜா


h-raja-slams-vaiko

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Dec, 2018 11:41 am
  • அ+ அ-

அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் brokers ஆளுநரை broker என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளித்ததற்காக 3 கல்லூாி மாணவிகளை அதிமுக தலைமையின் உத்தரவின் பேரில் பேருந்திற்குள் வைத்து தீயிட்டு கொளுத்திய பாவிகள் 3 பேரை விடுதலை செய்த ஆளுநா் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி கூறிய பிறகும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத குற்றத்திற்காக ஆளுநா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். 

தமிழகத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநா் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிச் செயல்பட்டு வருகிறாா்.
நாட்டிற்கு பிரதமா் நரேந்திர மோடி எப்படி சாபக்கேடோ, அதே போன்று தமிழகத்திற்கு ஆளுநா் பன்வாரிலால் புரோகித் ஒரு சாபக்கேடு" என்று ஆவேசமாக தொிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close