[X] Close

மோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்!- ராகுல் காந்தி தாக்கு


great-people-of-telangana-modi-kcr-owaisi-are-one

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Dec, 2018 14:44 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி, கேஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், எம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி மூவரும் ஒன்றே. அவர்கள் வாக்கு தவறி பேசுவார்கள். ஏமாந்துவிடாதீர்கள் என மக்களை எச்சரித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. இதனையொட்டி கட்வால் தொகுதியில் அவர் பிரச்சாரத்தில் உள்ளார்.

ராகுல் பேசும்போது, "பிரதமர் மோடி, கேஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், எம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி மூவரும் ஒன்றே. அவர்கள் வாக்கு தவறி பேசுவார்கள். ஏமாந்துவிடாதீர்கள்" என எச்சரித்துள்ளார்.

முன்னதாக அவர் பதிந்த ட்வீட் ஒன்றில், "தெலங்கானா மாநிலம் மிகப் பெரிய கனவுகளாலும் கொள்கைகளாலும் பிறந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் டிஆர்எஸ், பாஜகவின் செயலற்ற நிலையால், பிடிவாதத்தால், ஊழலால் மக்கள் ஆட்சியாளர்களை சந்தேகிக்கின்றனர்" எனப் பதிவிட்டிருந்தார்.

பி டீம், சி டீம்:

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி பாஜகவின் பி டீம். சந்திரசேகர ராவ் மோடியின் ரப்பர் ஸ்டாம்பாக தெலங்கானாவில் செயல்படுகிறார். ஓவைசி பாஜகவின் சி டீம். அவரது வேலை, பாஜக / கேசிஆர் வாக்குகளை பிரிப்பது என்றும் ராகுல் ட்வீட் செய்திருக்கிறார்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் 11-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close