[X] Close

மக்கள் துயரத்தின் போது எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன: அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு


cv-shanmugam-accuses-opposition-parties

பிடாகம் கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்து வைக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம்.

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 12:31 pm
  • அ+ அ-

விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு சார்பில் செயல்பட்டு வந்த மருந்தகம் கால்நடை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். இதில் ஆட்சியர் சுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “இந்த அரசு கஜா புயல் பாதித்த மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இந்த அரசுக்கு கிடைக்கும் நல்ல பெயரைக் கண்டு பொறுத்துக்கொள்ள மனமில்லாத எதிர்க்கட்சியினர், அதை குறை கூறும் வகையில் அவதூறாக பேசி வருகின்றனர்.

முதலில் அரசின் செயல்களை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் துயரமாக இருக்கக் கூடிய இந்த தருணத்தில் கூட அங்கு போராட்டம் போன்ற தரமற்ற அரசியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது அங்கிருக்கும் மக்களுக்கும் தெரியும். அன்புமணி ராமதாஸ், திராவிடக் கட்சிகளின் தயவில் தான் அமைச்சராக பதவி வகித்தார் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close