[X] Close

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக, திமுகவினர்


dmk-admk-starts-campaigning-before-announcement

ஆண்டிபட்டி பகுதியில் சுவர் விளம்பரம் மூலம் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அதிமுகவினர்.

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 13:44 pm
  • அ+ அ-

தேனி மாவட்டத்தில் பெரிய குளம், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் முன்பே திமுக மற்றும் அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவுக்குப் பின் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 20 தொகுதிகளிலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா, அல்லது அதற்கு முன்னதாகவே நடத்தப்படுமா என்பது குறித்து திட்டவட்டமான எந்த விவரமும் தெரியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தற்போதே பல தொகுதிகளில் சுவர் விளம்பரம் மூலம் தங்களின் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளில் உள்ள அதிமுக மற்றும் திமுகவினர் தற்போதே கிராமங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கள் கட்சிகளின் சின் னங்களை வரைந்தும், தங்கள் ஆட்சிக்காலத்தின் சிறப்பைத் தெரிவித்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிமுகவினர் கூறும்போது, தேர்தல் தேதி எப்போது வேண்டு மானாலும் அறிவிக்கட்டும். ஆனால் இப்போதே நாங்கள் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். முதல்வர், துணை முதல்வர் பெயரை பயன்படுத்தியும், எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தியும் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்றனர்.

திமுகவினர் கூறும்போது, தற்போதைக்கு சுவர் விளம்பரத்தின் மூலமாக பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். கட்சித் தலைவரையும், கட்சி சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close