[X] Close

ஹாட்லீக்ஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் பீட்டர்?


hot-leaks-congress

பீட்டர் அல்போன்ஸ்

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:41 am
  • அ+ அ-

தமிழக காங்கிரஸின் கூடுதல் மாநிலப் பொறுப்பாளர் சஞ்சய் தத் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உடன் செல்லவில்லை. 

அந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின், அரசருக்கு எதிராகத் தனது அதிருப்தியை சஞ்சய் தத்திடம் நேரடியாகவே வெளிப்படுத்தினாராம்.

 “இவரைத் தலைவர் பொறுப்பில் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் வரலாம். எனவே, இவரைத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றச் சொல்லுங்கள். இதை நான் சொன்னதாகவே உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என்றாராம் ஸ்டாலின். 

இதையடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை. 

பீட்டர் அல்போன்ஸ் அவசரமாய் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

 அநேகமாக, திமுகவுடன் தோழமையுடன் இருக்கும் பீட்டர், தமிழக காங்கிரஸ் தலைவராக வந்தாலும் வரலாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close