[X] Close

ஹாட்லீக்ஸ் : அமித்ஷாவின் அரித்மெட்டிக்!


hot-leaks-amithshah

அமித்ஷா

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:27 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் உ.பியில் இந்த முறையும் கணிசமான இடங்களைக் கைப்பற்ற நினைக்கிறது பாஜக. 

இதற்கு ஏதுவாக, அரசுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கும் வேலைகளில் பாஜக தலைவர் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் சித்தப்பாவான ஷிவ்பால்சிங் யாதவை வைத்து சமாஜ்வாதி கட்சியை உடைத்தார்.

 அடுத்ததாக, சுயேச்சையாக நின்றே ஆறு முறை வென்ற தாக்கூர் சமூகத்தின் ராஜா பய்யாவையும் புதுக் கட்சி தொடங்க வைத்தார். 

அடுத்த முயற்சியாக உதிரிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்துப் புதிதாக ஒரு கூட்டணியையும் உருவாக்கி களத்தில் இறக்கிவிட கணக்குப் போடுகிறார் அமித்ஷா. 

இந்த மூன்று பிரிவுகளுமே அகிலேஷ், மாயாவதி, அஜீத்சிங் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு விழும் பாஜக எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாக கபளீகரம் செய்யும் என்பதே அமித்ஷாவின் அரித்மெட்டிக்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close