[X] Close

ஹாட்லீக்ஸ் : பராசக்திக்கு பதில் மலைக்கள்ளன்


hot-leaks-goa

பராசக்தி - சிவாஜி

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 16:10 pm
  • அ+ அ-

கோவாவில் நவம்பர் 20-ல் தொடங்கிய 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு, டூ லெட், பரியேறும் பெருமாள், பாரம் ஆகிய நான்கு தமிழ் படங்கள் திரையிடப்பட்டன. 

இவை தவிர, மறைந்த திரைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தியும் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ திரைப்படமும் திரையிட முடிவுசெய்யப்பட்டது. 

இந்தத் தகவல் இந்து தமிழ் உள்ளிட்ட நாளேடுகளில் முன்கூட்டியே செய்தியாக வெளியானது. 

இதையடுத்து பாஜக வட்டாரம் சுறுசுறுப்பாகி, பராசக்திக்குத் தடைபோட்டுவிட்டது. 

‘பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யும் படம் பராசக்தி’ என்பதே அதற்குச் சொல்லப்பட்ட காரணம். 

கடைசியில், பராசக்திக்குப் பதிலாக, கருணாநிதி கதை வசனம் எழுதிய மலைக்கள்ளன் திரைப்படம் கடந்த 21-ம் தேதி திரையிடப்பட்டது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close