[X] Close

அரசியல் வரலாற்று புரிதலில் பாஜக எப்போதுமே வீக்!- ஜேட்லிக்கு சசி தரூர் பதிலடி


political-history-is-clearly-not-the-bjp-s-strong-suit

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Nov, 2018 15:52 pm
  • அ+ அ-

அரசியல் வரலாறு சார்ந்த புரிதலில் பாஜக எப்போதுமே வலுவான நிலையில் இருந்ததில்லை என ஜேட்லிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி., அருண் ஜேட்லி.

முன்னதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காங்கிரஸ் மீது ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தார். நேரு தனது அரசியல் வாரிசாக இந்திரா காந்தியை வளர்த்தெடுத்தார். அவர்தான் இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு அடித்தளம் அமைத்தார். அந்த வழியில் 1975-ல் இந்திரா காந்தி சர்வாதிகாரியாக உருவெடுத்தார். அதன்பின்னர் இந்தியாவை வாரிசு அரசியல் விதியை பின்பற்றும் ஜனநாயகமாக மாற்றுவது காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகவே ஆனது" என்று கூறியிருந்தார்.

இதனை மறுத்துள்ள சசி தரூர் தனது ட்விட்டரில் ஜேட்லிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், "நேரு, அவரது மகள் இந்திராவை அடுத்த தலைமை பொறுப்புக்காக வளர்த்தெடுத்தார் என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நான் கல்லறையில் இருந்து ஆட்சி செலுத்த முடியாது என தெளிவாகக் கூறினார். அதனால்தான் அவருக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இந்திராவின் பெயர் ஆலோசிக்கப்படவில்லை. அரசியல் வரலாறு சார்ந்த புரிதல் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுக்கு புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close