[X] Close

ஹாட்லீக்ஸ்: முகநூலில் பாஜகவுக்கு பதிலடி


hot-leaks-bjp

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 10:14 am
  • அ+ அ-

 மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வைரலானவர் யதீஷ் சந்திரா ஐ.பி.எஸ். 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கம்யூனிஸ்ட் கட்சியினராலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானவர் இவர். 

இவரை, ‘பைத்தியக்கார நாய்’ என விமர்சித்திருந்தார் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். 

பணியிலிருந்து இவரை நீக்க வேண்டும் என பினராயி விஜயனும் குரல் கொடுத்திருந்தார். 

அரசின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் யதீஷ் சந்திரா, இப்போது கம்யூனிஸ்ட்களுக்குச் செல்லப்பிள்ளை! 

அமைச்சரோடு வாக்குவாதம் செய்ததாக பாஜகவினர் இவரை சமூக வலைதளங்களில் அர்ச்சித்துவரும் நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்குக் காவல்துறை செய்யும் சேவைகள் குறித்து தொடர் வீடியோக்களைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து பதிலடி கொடுத்து வருகிறார் யதீஷ் சந்திரா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close