[X] Close

ஹாட்லீக்ஸ்: மக்கர் செய்யும் குக்கர் ஜாதகம்!


hot-leaks-dhinakaran

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 09:46 am
  • அ+ அ-

குக்கர்காரருக்கு சமீபகாலமாகத் தொட்டதெல்லாம் தோல்வியாகவே இருக்கிறது. 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை பெரிதாக நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை.

 அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இப்போது தலைமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. 

குக்கர்காரர் வெளியில் இருப்பதால்தான் தனது ஆதரவாளர்களை எங்கும் சென்றுவிடாதபடிக்கு கட்டிக்காத்து வருகிறார். அவரை சிறிது காலம் உள்ளே முடக்கி வைத்தால் அவரது அணியை முகவரி இல்லாமல் செய்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறதாம் டெல்லி தலைமை. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படியொரு அதிரடி நடவடிக்கை இருக்கும் என்று சொல்லி குக்கர் கட்சியின் முக்கியத் தலைகள் சிலரை தாய்க்கழகம் திரும்பிவிடும்படி சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறதாம் டெல்லி!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close