[X] Close

ஹாட்லீக்ஸ் : குருவை வைத்த இடத்தில்...


hot-leaks-pmk

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 09:12 am
  • அ+ அ-

காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு வன்னியர் சங்கத்தை வழிநடத்த பாமக துணைப் பொதுச் செயலாளர் வைத்தியைத் தயார்படுத்துகிறது பாமக. 

ஆனால், மருத்துவர் ராமதாஸை விட மேலாக குருவைக் கொண்டாடிக் கொண்டிருந்த வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், வைத்தியை முன்னிறுத்துவதை ஏற்கவில்லையாம். 

தனது சுயநலத்துக்காக குருவுடன் யாரையும் நெருங்காமல் பார்த்துக் கொண்டவர் வைத்தி என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.

 இதனால், வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக என மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களைத் தக்கவைப்பதற்காக, “உங்களை அய்யாவிடம் அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு எதுவேண்டுமானாலும் செய்து தருகிறேன். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம்” என தாஜா செய்து கொண்டிருக்கிறாராம் வைத்தி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close