[X] Close

ஹாட்லீக்ஸ்: எனக்கு அமைச்சர் பதவி வேணும்!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 09:07 am
  • அ+ அ-

திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான பரமேஸ்வரி முருகன் அதிரடிக்குப் பேர்போனவர். 

யாருக்கும் பணிய மறுக்கும் பரமேஸ்வரி, மாவட்ட அமைச்சர்களான வளர்மதியையும் வெல்லமண்டி நடராஜனையும்கூட அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை. 

இப்போது அம்மணி எடுத்திருக்கும் அதிரடி என்ன தெரியுமா?

 “இன்னும் இரண்டு மாதத்துக்குள் எனக்கு அமைச்சர் பதவியோ வாரியத் தலைவர் பதவியோ வேண்டும். ஸ்ரீரங்கத்தில் சாதாரண வார்டு கவுன்சிலரா இருந்த வளர்மதில்லாம் அமைச்சராக இருக்கும்போது நான் அமைச்சராகக்கூடாதா?” என்பதுதான் அம்மணி எடுத்திருக்கும் அதிரடி. 

இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கச் சொல்லி முசிறித் தொகுதி எம்எல்ஏ-வான செல்வராஜும் சாதி பாசத்தில் தலைமையிடம் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறாராம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close