[X] Close

ஹெலிகாப்டரில் பறந்தால் மக்கள் சோகம் தெரியாது!- முதல்வரை சாடிய கமல்


feel-the-pain-at-ground-kamal-says-to-eps

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Nov, 2018 16:19 pm
  • அ+ அ-

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தால்தான் அவர்கள் சோகம் புரியும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டால் எதுவும் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாடியிருக்கிறார் கமல்ஹாசன்.

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளை செவ்வாய்க்கிழமையன்று பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம், மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2 இடங்களில் மட்டும் அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம் நேரில் முறையிட அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.  ஏற்கெனவே டெல்டா பகுதிகளுக்கு சென்ற அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டதால் முதல்வரின் பயணம் பாதியிலேயே ரத்தானதாக கூறப்பட்டது. ஆனால், மழை காரணமாகவே முதல்வரின் பயணம் ரத்தானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?  அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close