[X] Close

அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை!- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


mk-stalin-slams-eps

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Nov, 2018 14:46 pm
  • அ+ அ-

டெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தருவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டரில், "டெல்லிக்குச் சென்றும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தரும் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்! அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளை தடுத்தாக வேண்டும்! இனியாவது, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மற்றுமொரு ட்வீட்டில், "ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே ஆய்வு நாடகம் நடத்திய முதலமைச்சர் 'எட்டிப்பார்க்காத' பழனிசாமி, 
மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட மக்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - பொதுநலச் சங்கங்களை நேரடியாக சந்தித்து கலந்து ஆலோசித்திருக்க வேண்டாமா?" என்று வினவியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close