[X] Close

நாகை, திருவாரூர் செல்லவில்லை; பாதியில் திரும்பினார் முதல்வர்


gaja-edappadi

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 12:44 pm
  • அ+ அ-

டெல்டா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், பாதியிலேயே திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

கஜா புயல் புரட்டிப் போட்டு வாழ்வாதாரத்தைச் சூறையாடிய மாவட்டங்களுக்கு இன்று நேரில் சென்று பார்வையிடவும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் இருந்து இன்று கிளம்பிச் சென்றார்.

காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றார். பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்குச் சென்றார். அங்கு நிவாரப் பணிகளை வழங்கினார்.

இதையடுத்து, தஞ்சாவூருக்கு வந்தார் முதல்வர். அங்கே சேதமடைந்த சில பகுதிகளைப் பார்வையிட்டார். பிறகு அந்தக் கிராமத்து மக்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

இந்த நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதால், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துகொண்டிருப்பதால், எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூரில் இருந்து அப்படியே திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்றார் எடப்பாடி பழனிசாமி.

சேதப்பகுதிகளைப் பார்வையிட மீண்டும் வருவார் என்கிறார்கள் அதிகாரிகள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close