[X] Close

நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர்! அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல


sticker-again-in-relief-material

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Nov, 2018 10:47 am
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என இரண்டு பேரின் படமும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2015 டிசம்பர் மாதம் சென்னை வரலாறு காணாத பெரு மழையில் சிக்கித்தவித்தது. சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு,  பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தன. அப்படி வந்த நிவாரணப் பொருட்களில், அதிமுகவினர்,  முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது, 2018 நவம்பரில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டுள்ளது. 15-ம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்கத்தொடங்கிய கஜா அடுத்த நாள் காலை வரை எவற்றையெல்லாம் வாரி சுருட்ட முடியுமோ அவற்றையெல்லாம் அடியோடு பெயர்த்தெறிந்து சென்றது.
சோறுடைத்த சோழநாட்டுக்கா இந்த நிலை என்று குமுறும் அளவுக்கு ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் கேள்விக்குறியாகி நிற்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பிய நிலையில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல்வர் பழனிசாமி புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுவருகிறார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிதாக ஜெயலலிதா உருவப்படம் சற்றே சிறியதாக எடப்பாடி பழனிசாமி படம் என இரண்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இதுபோன்று நிவாரணப் பொருட்களில்கூட அரசியல் செய்யலாமா என விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல என்று உணர்த்துவதுபோல் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது.
அண்மையில்,  ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டி அவரது மன்றத்தினர் புயல் நிவாரணப் பொருள் வழங்கியதும் பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close