[X] Close

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன் குற்றச்சாட்டு


law-and-order-in-tamil-nadu-damaged-kamal-haasan

  • Team
  • Posted: 28 Feb, 2018 05:27 am
  • அ+ அ-

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையிலிருந்து நேற்று சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டனத்துக்குரியது. தமிழக தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு, எதற்கு போகிறோம் என்று தெரியாமல் ஆந்திராவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகை கவுதமி செல்வது போல் எனக்கும், அவருக்கு எந்த உறவும் இல்லை என்பது உண்மைதான். அவருக்கான சம்பள பாக்கி இருந்தால், சினிமா கம்பெனி அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஸ்ரீதேவியின் குழந்தைகளை பார்க்க மும்பை சென்றேன். ஸ்ரீதேவியின் மரணம் வருத்தத்துக்குரிய விஷயம். அவருடைய மரணம் குறித்து பேச நான் விரும்பவில்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் படிக்கின்றனர். அதேபோல், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு கமல் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close