[X] Close

கிராபிக் நாவல்களில் ஆர்வமில்லை, பழைய காமிக்ஸ்களை எப்பொழுதும் விரும்புகிறேன்: ரஸ்கின் பாண்ட்


ruskin-bond-interview

  • kamadenu
  • Posted: 31 May, 2018 18:52 pm
  • அ+ அ-

குழந்தைகளுக்கான எழுத்தில் தனித்துவம் மிக்கவர் ரஸ்கின் பாண்ட். 17 வயதில் தனது முதல் புத்தகம் வெளிவந்தபோது எப்படி இருந்தாரோ அதிலிருந்து ரஸ்கின் பாண்ட் இன்னும் வெளியே வரவில்லை.

பாண்ட் இளம் வயதிலேயே தனது வாழ்வில் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டார். எட்டு வயதான போது, மலையில் இருந்த சிறைச்சாலை போன்ற ஓர் 'உண்டு உறைவிடப் பள்ளி'யிலிருந்து தப்பி ஓடி டெல்லியிலிருந்த தனது தந்தையுடன் வாழ்ந்தார். அவரது பெரும்பாலான நேரங்கள் புத்தகங்கள், சினிமாவுக்குச் செல்லுதல், இசை கேட்டல், நடைப்பயிற்சி, அப்பாவுடன் உரையாடல் என ஒரு கனவு வாழ்க்கை போல கழிந்தன. ஆர்வமான அதே சமயம் பெருமளவில் கற்பனைகளில் வாழ்ந்த சிறுவனான அவர் பின்னாட்களில் சவால்களை எதிர்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம், கசவுலியில் ரஸ்கின் பாண்ட் பிறந்தார். வளர்ந்தது ஜாம்நகர், டேராடூன், புதுடெல்லி மற்றும் சிம்லா. அவர் இளைஞராக இருந்தபோது, நான்கு ஆண்டுகள் சேனல் தீவு பிறகு லண்டனில் சில காலங்களை செலவழித்திருக்கிறார். பின்னர் 1955ல் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். தற்போது அவர் தனது தத்து குடும்பத்தோடு மிசவுரி மலைப்பிரதேசத்தில் லாண்டூரில் வசித்துவருகிறார்.

அவருக்கு இப்போது வயது 84. சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என ரஸ்கின் பாண்ட் எண்ணற்ற படைப்புகளை அளித்திருக்கிறார். அவர், இதழ்கள் மற்றும் தொகுப்பு நூல்களில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மற்றும் இதர படைப்புகளும் எழுதியிருக்கிறார். முறையான துப்பறியும் கதை எழுத வேண்டும் என்ற ஆவலில் இருப்பவர்.

மே 19 அன்று அவருக்கு 84வது பிறந்த தினம். அவரது சமீபத்திய புத்தகம் ராஞ்சி அண்ட் தி மியூஸிக் மேகர் (Ranji and the Music Maker). இந்த நேர்காணலில், அவரது படைப்புகள், அவரது இளமைக்காலம் பற்றி பகிர்ந்து கொள்கிறார். 

புதிய புத்தகம் பற்றி....

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் வெளியீட்டில் வந்துள்ள ராஞ்சி அண்ட் தி மியூஸிக் மேகர் (Ranji and the Music Maker) எனது சமீபத்திய புத்தகம். ராஞ்சி எனும் சிறுவனைப் பற்றிய கதை இது.

ஒருமுறை தனது சோர்வுமிக்க விடுமுறைக்கு மத்தியில் வீட்டிலுள்ள ஸ்டோர் ரூம்மில் நுழைகிறான். அங்கிருந்த வகைவகையான இசைக்கருவிகள் எடுத்து இசைக்கத் தொடங்குகிறான். முதலில் ஒரு புல்லாங்குழலை வாசிக்கிறான். பின்னர் ட்ரம்பெட்டை இசைக்கிறான். இறுதியாக போர் அணிவகுப்புக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு பெரிய டிரம்செட்களில் ஓசையை எழுப்புகிறான்.

ராஞ்சி முன்னறிவிப்பின்றி சாலையில் இறங்கி தனது இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறான். அவனது  இசை, அண்டை வீட்டுக்காரர்கள், சுற்றிலும் உள்ள பூனைகள், உயிரியல் பூங்காவில் இருக்கும்  மிருகங்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

இலங்கையிலிருந்து ஒரு சிறுவன், ஒரு பூனைக்குட்டிக்காக புல்லாங்குழல் வாசிக்கும் புகைப்படத்தை என் ரசிகர் ஒருவர் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அதனால் நான் ஈர்க்கப்பட்டேன். அதுவே இந்தக் கதை உருவாகக் காரணமாகிவிட்டது. புகைப்பட சிறுவனை ராஞ்சி எனும் சின்னஞ்சிறு சிறுவனாக நான் கற்பனை செய்து கொண்டேன்.

எழுத்துப் பயணம் தொடங்கியபோது...

நான் 17 வயதில் எழுதும் முயற்சியில் இறங்கிய போது, நல்ல, வெற்றிகரமான எழுத்தாளராக விளங்க வேண்டும் என்று விரும்பினேன். கவிதை, உரைநடை, கதைகள், கட்டுரைகள் என நல்ல படைப்புகளை மட்டும் தர வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன்.

படிக்கும் பழக்கம்...

நான் முதலில் படித்தது குழந்தைகளுக்கான பாடல்களைக் கொண்ட பெரிய புத்தகம். ஒரு இளைஞனாக எனக்கு விருப்பமான எழுத்தாளர்களை பின்பற்றினேன். அவர்களைப் போலவே ஆக நினைத்தேன்.

தற்போதைய குழந்தைகள் இலக்கியம் குறித்து...

நிறைய பதிப்பகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அனைத்து வயதினருக்குமான புத்தகங்களும், அதற்கு தகுந்த நல்ல ஓவியர்களும்கூட இருக்கிறார்கள்.

எனக்கு கிராபிக் நாவல்களில் ஆர்வமில்லை; ஆனால் பழைய காமிக்ஸ்களை எப்பொழுதும் விரும்புகிறேன் குறிப்பாக பாப்பாய் மற்றும் பீட்டில் பைலி போன்ற காமிக்ஸ் எனக்குப் பிடிக்கும்..

படைப்புகளை எழுதுவது எப்படி? கையெழுத்தா, தட்டச்சா?

நான் நன்றாக தட்டச்சு செய்வேன். ஆனால் விரல்களில் ஏற்பட்ட ஒருவித விறைப்புத் தன்மையால் டைப்ரைட்டர் மெஷினை பத்தாண்டுகளாக பயன்படுத்தவில்லை. பதிப்பகத்தார் எனது கையெழுத்துப்படிகளை வாங்கி அவர்களே தட்டச்சு செய்து அதன் பிரிண்ட்அவுட் நகல்களை எனக்கு அனுப்பிவைக்கின்றனர். இப்பொழுதும் நான் பேனாவில்தான் எழுதுகிறன்.

- பால் நிலவன்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close