[X] Close

உலகின் மூத்த நபருக்கு வயது 121...


work-key-to-long-life-says-121-year-old-who-may-be-world-s-oldest-man

மேனுவம் கிரேசியா

  • kamadenu
  • Posted: 19 May, 2018 15:39 pm
  • அ+ அ-

மெக்சிகோவைச் சேர்ந்த மேனுவம் கிரேசியா என்ற முதியவர் தன்னை உலகின் மிக வயதானவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். 

மெக்சிகோவிலில் உள்ள வெராகர்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மேனுவம் கிரேசியா, இவர் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தார்.  அவருக்கு இப்போது வயது 121. 

உலகின் வயதான நபராக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ள  ஜப்பானின் மசாசோவை விட (113 வயது) கிரேசியா 8 வயது பெரியவர். 
எனினும் அவர் தன் பெயர், உலகின் வயதான நபராக கின்னஸில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஆனாலும் அவரது பிறப்புச் சான்று முதலான சான்றிதழ்கள்  உலகின் வயதான நபர் அவர் என்று உறுதிப்படுத்துகின்றன.

இந்த 121 வயதிலும் சுறுசுறுப்பாக தனது வேலைகளைத் தானே செய்து கொள்ளும் கிரேசியாவுக்கு அவர் பகுதிகளில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தனது உடல் ஆரோக்கியம் குறித்து கிரேசியா கூறும்போது,  ”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  ஆனால் சற்று ஒய்வாக இருக்கிறேன்.  நான் படுக்கையிலேயே இருந்தால் நோயுற்றுவிடுவேன்.  நான் 80  வயது போலவே உணர்கிறேன்.  என்னால் முன்புபோல விவசாயம் செய்ய முடியவில்லை. அதுதான் வருத்தமாக உள்ளது.  நான் இளைஞனாக இருக்கும்போது கடின உழைப்பாளியாக இருந்தேன்” என்றார்.

கிரேசியாவின் மகள் தோமாசா கூறும்போது, ”அவர் இன்னும் சில வருடங்கள் வாழ வேண்டும். அதைத்தான் நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்ற தெரிவித்தார்.

121 வயது இளைஞர், இன்னும் இன்னும் ஆரோக்கியமாக வாழட்டும். அவர் நினைத்தது போலவே விவசாயத்தில் ஈடுபடட்டும். 
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close