[X] Close

ஒரு ஜீவன் அழைத்தது...: ஃபேஸ்புக்கில் இன்று நான் ரசித்த பதிவு


impressive-song-by-a-lady

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Apr, 2018 15:59 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் நம்மை ஏதாவது ஒரு பதிவு நம்மீது சில தாக்கத்தை ஏற்படுத்தும். சில பதிவுகள் ஈர்க்கலாம். ஏதேனும் ஒரு பதிவு கோபப்படுத்தலாம். சில பதிவுகள் சிரிக்க வைக்கலாம். இன்று என்னை ஒரு பதிவு மிகவும் ரசிக்க வைத்தது.

பணியிடத்தில் என்ன பாட்டு வேண்டியிருக்கு என்று குறுகிய மனப்பான்மையுடன் பார்க்காமல் பணிக்கிடையே சிறு இளைப்பாறுதல் தேவை என்ற எண்ணத்துடன் இந்தப் பகிர்வை பார்த்தல் நலம்.

இவரைப் போன்றோருக்கு முறையாக பயிற்சி அளித்தால், டிவி ஷோக்கள் பக்கம்கூட தலைகாட்ட முடியும். தலைகாட்டுவது என்ன குறிப்பிட்ட ரவுண்டுகள் வரை சாதித்துக்கூட காட்ட முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இனிமையான குரலில் பாடி ரசிக்கவைத்த இந்த அக்காவுக்கு ஒரு சபாஷ்.

 

எளிய மனிதர்களின் பொழுதுபோக்கு இனிமையானது.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close