[X] Close

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 4 வயது சிறுமி தந்தையுடன் விழிப்புணர்வு பிரச்சாரம்


road-safety-sirumi

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து திருநெல்வேலி சந்திப்பில் தந்தை சாமுவேல்ராஜூவுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிறுமி லக்சண்யா| படம்: மு.லெட்சுமி அருண்

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 12:26 pm
  • அ+ அ-

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து 4 வயது சிறுமி, தனது தந்தையுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

பத்தமடையைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ்(32). இவரது மகள் லக்சண்யா(4) எல்கேஜி படிக்கிறார். நேற்று சாமுவேல்ராஜ் தனது மகள் லக்சண்யாவுடன் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு அட்டைகளை பிடித்தவாறு, திருநெல் வேலி சந்திப்பு சிக்னல் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சாமுவேல்ராஜ் கூறும்போது, “ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும். சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று எனது மகளிடம் அடிக்கடி கூறுவேன். கடந்த 4 மாதமாக ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களில் எனது மகளுடன் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எனது மகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. வாரந்தோறும் ஏதாவது ஒரு சிக்னல் பகுதியில் விழிப்புணர்வு அட்டைகளை பிடித்தவாறு பிரச்சாரம் செய்து வருகிறோம். எங்கள் பிரச்சாரத்தை பார்த்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்காவது ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பூங்கா போன்ற பொது இடங்களை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட உள்ளோம்” என்றார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close