[X] Close

கோவையில் `நவராத்திரி திருவிழா 2018’


navarathiri-in-kovai

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 10:11 am
  • அ+ அ-

கோவை

கோவை ஐடியாபீடியா சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பி.எம்.என். திருமண மண்டபத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த விழாவில், 10000 பொம்மைகளுடன் கூடிய வண்ணமயமான கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மேலும், மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

கடந்த 9-ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதையொட்டி, மேட்டுப்பாளையம் வாசுதேவன், நிவேதிதா ஷ்யாம்சுந்தரின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கிருபானந்த வாரியாரின் சிஷ்யை தேச மங்கையர்க்கரசி பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று (அக். 12) தேசிய அளவில் பிரசித்தி பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சி, நாளை (அக். 13) வீரமணி ராஜு குழுவினரின் பக்தி கச்சேரி, 14-ம் தேதி பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நிகழ்ச்சி, 15-ம் தேதி செல்வராஜன் குழுவினரின் பொம்மலாட்டம், 16-ம் தேதி கோவை அபிநய நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 17-ம் தேதி மஞ்சப்ரா மோகன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஐடியாபீடியா நிறுவன நிர்வாகி சந்திரசேகரன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close