[X] Close

ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா 


navarathiri-special-article

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 14:54 pm
  • அ+ அ-

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது.

ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு சன்னதி அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு திருக்காப்பிடல் நடை பெற்றது.

அப்போது வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் இன்று (புதன்கிழமை) பர்வதவர்த்தினி அம்மன் பசிப்பிணி போக்கும் அன்னபூரணி அலங்காரத்திலும், நாளை (வியாழக்கிழமை) மகாலெட்சுமி அலங்காரத்திலும், வெள்ளிக்கிழமை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளு வார்.

சனிக்கிழமை சரஸ்வதி அலங்காரத்திலும், ஞாயிற்றுக் கிழமை கவுரி சிவபூஜை அலங்காரத்திலும், திங்கட்கிழமை சாரதாம்பிகை அலங்காரத்திலும், அக்16-ல் கெஜலெட்சுமி அலங்காரத்திலும், அக்.17-ல் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத் திலும் அருள் பாலிப்பார்.

அக்.18-ல் துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி அலங்காரம் எனப் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்டோபர் 19-ம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் வன்னி நோம்பு திட்டையில் அம்பு எய்யும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close