[X] Close

நந்தினி சீரியலில் நவராத்திரி ஸ்பெஷல்


navarathiri-in-nandini

  • முகமது சல்மான்
  • Posted: 10 Oct, 2018 13:08 pm
  • அ+ அ-

சன் டிவியில் குஷ்பு தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி.  ராஜ் கபூர் இயக்கிவரும் இந்த தொடரில் காயத்ரி ஜெயராம், குஷ்பூ, ரியாஸ் கான், நித்யா ராம், மாளவிகா, ராகுல் ரவீந்திரன்,  ஆகியோர் நடித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நந்தினி தொடரிலும் நவராத்திரி தொடர்பான சிறப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் பிரபல பாடகி சுதா ரகுநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ராஜ் கபூர் பேசியவதாவது:

“நந்தினி தொடர் 525 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் திரையுலக பயணத்தில் திரைப்படங்களை காட்டிலும் நான் அதிகம் பயன்பெற்றது இந்த நந்தினி சீரியல்தான். நான் ஒரு படம் படமெடுக்க வேண்டுமென்றால் 4 மாதங்கள் எடுத்துக் கொள்வேன். ஆனால் நந்தினி சீரியல் மூலம் மாதம் 4 படங்களை எடுக்கிறேன். சினிமா எடுப்பது மிகவும் எளிது. ஆனால் சீரியல் எடுப்பது ரொம்ப கஷ்டம். நவராத்திரியை மக்களுக்கு பிரம்மாணடமாக காட்டவேண்டும் என்பதற்காக நிறைய செலவு செய்து செட் அமைத்திருக்கிறோம். ஷங்கர் படத்தில் கூட இப்படி போட்டிருக்கமாட்டார்கள். இதை சிறப்பிப்பதற்காக சுதா ரகுநாதன் அவர்கள் வந்திருக்கிறார். அவர் வந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேசிய ராஜ் கபூர், “நந்தினி சீரியலில்தான் ஹெலிகேம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான் மற்ற சீரியல்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நான் சினிமாவை சீரியலுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் இதை 500 நாட்களாக முடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் சன் டிவியில் இன்னொரு 250 நாட்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close